சீமான் விமர்சனமும்! தவெக-வின் பதிலடியும்! நடந்தது என்ன?

2026 ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஆக ஜான் ஆரோக்கிய சாமி, ஆதவ் அர்ஜுன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தற்போது I PAC நிறுவனத்தின் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த கிஷோர் விஜய்யை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய் மீதும் அவர் கட்சியின் மீதும் கடுமையான விமர்சனத்தை வைத்து உள்ளார்.
சீமான் பேசிய போது நடிகர் விஜயிடம் பணம் கொழுப்பு அதிகம் என்பதால் பிரசாந்த கிஷோர் அழைத்து உள்ளார்.என்னிடம் பணம் இல்லை ஆனால் மூளை உள்ளது எனக்கு தேர்தல் வியூக வகுப்பாளர் தேவை இல்லை என்று கூறி உள்ளார். இதற்கு பதிலடி கொடுத்த தவெக நிர்வாகி திரள் நிதி வாங்கும் சீமானுக்கு திறமையானவர்களின் ஆலோசனைகள் தவறாக தான் தெரியும் என்றும் நாங்கள் சட்ட மன்றதில் பேசுவதற்காக தான் பேசுகிறோம் சீமான் பட்டி மன்றத்தில் பேசுவதற்காக பேசுகிறார். என தவெக இணை கொள்ளகைபரப்பு செயலாளர் சம்பத் குமார் சீமானுக்கு பதிலடி கொடுத்து உள்ளார்