எடப்பாடியின்-பாய்ச்சல் ஸ்டாலினுக்கு-காய்ச்சல் என்ன நடக்கிறது தமிழ்நாட்டின் அரசியல்?

2026ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தல் திருவிழா இப்போதே களைகட்டி உள்ளது.தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி ஆனஅதிமுக தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் என்ற பிரச்சாரம் பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கி உள்ளார் மறுபுறம் திமுக ஓரணியில் தமிழ் நாடு என்று வீடு வீடாக சென்று பிரசாரத்தை தொடங்கி உள்ளது 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் NDA கூடட்ணியில் இருந்து வெளியேறிய அதிமுக தற்போது 2026 ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் NDA கூட்டணியில் இடம்பெற்றுள்ளது இரு கட்சிகளும் தங்கள் பிரச்சார பயணத்தை ஆரம்பித்து உள்ளனர். எடப்பாடியின் பிரச்சாரம் மக்களிடம் மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது முன்னர் போல் இல்லாமல் தன் கட்சியை இந்த முறை ஆட்சி கட்டில் அமர வைக்க வேண்டும் என்று விறுவிறுப்பான பிரச்சாரம் செய்கிறார். இது மக்களிடம் வரவேற்பை பெற்றும் இருக்கிறது.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவரின் அண்ணன் திரு. மு. க. முத்து மறைவு ஸ்டாலினுக்கு பெரும்தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் முதல்வர் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கூடிய விரைவில் நலம் பெற்று மக்கள் பணியை தொடர்வார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இரு கட்சிகளும் தமிழகத்தை 50 ஆண்டுகள் ஆண்டாலும் வர போகின்ற சட்ட மன்ற தேர்தலில் யார் வெல்வது என்பது கணிக்க முடியாத ஒன்று என்றும் அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். வருகின்ற நாட்களில் முதல்வர் மக்களை நேரடியாக சந்திப்பார் என்றும் எதிர்கட்சியின் தலைவர் கேட்கும் கேள்விக்கு தக்க பதில் அளிக்க உள்ளார் இனிமே தான் திமுகவின் தேர்தல் வியூகம் தொடங்க போகிறது என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

 

 

Sponset
Oppgrader til Pro
Velg riktig plan for deg
Sponset
More Articles
Vis mer
Oppdag hendelser
Vis mer
Oppdage mennesker
Vis mer
Sponset