Chennai's unseen

Hey all!♥️ வணக்கம்🙏🏻

உங்களுக்கு ஒன்னு தெரியுமா??

இப்போது சென்னையில் உள்ள தி.நகர், முன்னொரு காலத்தில் ஏரியின் இருப்பிடம் என்பது பலர் அறியப்படாத உண்மை! ஆம் இருபதாம் நூற்றாண்டில் அதிகப்படியான மக்கள் சென்னைக்கு வேலை தேடி வந்தமையால், சென்னை மாநகராட்சி அதன் எல்லையை அதிகரிக்க திட்டமிட்டது. எனவே, ஊர் நடுவே அமைந்திருந்த LONG TANK என்னும் ஏரியை தூர்த்துவிட்டு அங்கு ஓர் பூங்காவை அமைத்து மேலும் அதனை சுற்றி சாலைகளும் அமைத்து பெரும் நகரையே கட்டமைத்தது சென்னை மாநகராட்சி. 

இந்த கால கட்டத்தில் தியாகராய செட்டி என்பவர் President ஆக இருந்தமையால் அவரது பெயரையே அந்த நகருக்கு வைத்தனர் மாநகராட்சி அதிகாரிகள். 

இதற்கிடையில், அங்கே மாம்பலம் என்னும் சிறிய ஊர் ஒன்று இருந்தது அவ்வூரின் நடுவே ரயில் பாதை ஒன்று புதிதாக அமைத்து அதன் இருபுறமும் மேற்கு மாம்பலம் மற்றும் கிழக்கு மாம்பலம் என்று பிரித்து அழைக்கப்பட்டது. நாளடைவில் கிழக்கு மாம்பலம் என்னும் பகுதி தி.நகர் உடன் இணைத்து இப்போது மேற்கு மாம்பலம் மட்டுமே உள்ளது கிழக்கு மாம்பலமானது தி. நகர் என்றே அழைக்கப்படுகிறது.

Love
Like
3
Sponset
Oppgrader til Pro
Velg riktig plan for deg
Sponset
More Articles
Vis mer
Oppdag hendelser
Vis mer
Sponset