சினிமாவில் இருந்து முதல்வர் ஆன MGR ! சினிமாவை விட்டு முதல்வர் ஆகும் vijay !

MGR அரசியல் பயணம் காங்கிரஸ் தொடங்கி திக முதல் அதிமுக வரை ஒரு மாபெரும் சகாப்தம் உள்ளது அதிலும் சினிமாவில் இருந்து முதல்வர் ஆனா வரலாறு அவருக்கு மட்டும் உள்ளது 1972 ஆம் ஆண்டு திமுக கட்சியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் அதன் பின்விளைவு அப்போதைய திமுக தலைவர் கருணாநிதிக்கு தெரியவில்லை ஆனால் மக்களிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதுவரை கட்சி ஆரம்பித்த முதல் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த வரலாறு யாருக்கும் அமைந்தது கிடையாது ஆனால் இது தெரியாத பல நடிகர்கள் நாங்களும் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிக்க போகிறோம் என்று கனவில் கோட்டையை கட்டி சரிந்து போன வரலாறு தான் அதிகம் நடிகர் திலகம் சிவாஜி ஆரம்பித்து பாக்கியார்ஜ் ,T ராஜேந்திரன் முதல் விஜயகாந்த் வரை பட்டியல் நீண்டு கொன்டே போகிறது.
இதிலும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் 96 கால கட்டத்தில் இருந்து அரசியலில் களம் காணப்போவதாக பல செய்திகள் வந்தன இறுதியாக வயது மூப்பு காரணமாக அவரும் ஒதுங்கி விட்டார் .
ஆனால் யாரும் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராததை எதிர்ப்பாருங்கள் என்று மக்கள் நீதி மய்யம் என்று புது கட்சி தொடங்கினார் நடிகர் கமலஹாசன் மதுரையில் மாநாடு தொடங்கி 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 234 தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இதுவரை பார்த்த நடிகர்களில் ஆட்சி பிடிக்க அருகில் நெருங்கி வாய்ப்பை தவறவிட்டவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் 2011 ஆம் ஆண்டு அதிமுக உடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சி தலைவர் ஆனார் விஜயகாந்த் அதன் பின்னர் அவர் எடுத்த முடிவு அவரின் அரசியல் வாழ்க்கையை திசை திருப்பியது.
நடிகர் விஜய் லியோ படப்பிடிப்பை முடித்து விட்டு தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17 ஆம் தேதி 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் மாணவிகளை 234 தொகுதி வாரியாக தேர்வு செய்து நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்க தொகை வழங்கினார். இந்த செய்தி அரசியல் வட்டார அளவில் பேசும் பொருள் ஆனது சமீபத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய போது விஜய் அரசியலுக்கு வந்தால் நாங்கள் ஆதரவு அளிப்போம் என்று பேசினார். விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய போது விஜய் அரசியலுக்கு வந்தால் எங்களுக்கு எந்த பாதிப்பு இல்லை விஜய் அரசியலுக்கு வரலாம் என்று பேசினார். மக்கள் இயக்க நிர்வாகிகள் கடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் 2021ஆம் ஆண்டு விஜயின் அப்பா எஸ் எஸ் ஏ சந்திரசேகர் விஜய் பெயரில் புது கட்சியை துவக்கினார்.பின்னர் அதை விஜய் எனக்கும் கட்சிக்கும் சம்மதம் இல்லை என்று சொல்லி அறிக்கை வெளியிட்டார். தற்போது மீண்டும் தன் மன்ற நிர்வாகிகளை மாவட்டம் வாரியாக சந்தித்து அடுத்தகட்ட அரசியல் நகர்வு பற்றி நேற்று பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் இரவு நேர பாடசாலை போன்ற திட்டம் கிராமப்புற மாணவர்கள் படிப்பை கவனத்தில் கொள்ள இதுவும் ஒரு வாய்ப்பு ஆக அமையும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே இலவச உணவகம் மற்றும் இரத்த தானம் மற்றும் கண் தானம் போன்ற செயல்கள் நிர்வாகிகள் செய்து வருகின்றார் .இவைகள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி போன்று அரசியல் வேண்டாம் என்று சொல்லி விலகி விடுவாரா அல்லது திரையின் தளபதி மக்களின் அதிபதி ஆவரா என்ற கேள்விக்கு தேர்தலும் வரும் காலமும் தான் பதில் சொல்லும்என்று சொல்லி இருந்த நிலையில் தற்போது MGR,விஜயகாந்த் இடத்தை பிடிக்க நடிகர் விஜய் அவர்கள் தமிழக வெற்றிக் கழகம் என்ற புது கட்சியை தொடங்கி இருக்கிறார்.
கட்சி மாநாட்டில் பேசிய விஜய் எனது முன்னோர்கள் பார்த்துதான் நான் அரசியல் கட்சி தொடங்கி இருக்கிறேன் எனக்கும் அரசியல் ஆழம் என்னவென்று தெரியும் நானும் அதை பார்த்து கொள்கிறேன் என்று திட்டவட்டமாக அறிவித்தார்.விஜயின் சினிமா பின்புலத்தில் அவரின் தந்தை SA.சந்திரசேகர் வழியில் வந்தாலும் அவரின் சினிமா வெற்றி எளிது என்று சொல்லமுடியாது.
நடிகர்களின் வாரிசு என்று பலர் நடிகராக இருந்தாலும் யாரும் விஜய் இடத்தை இதுவரை பிடிக்க முடியவில்லை தமிழ் சினிமாவின் முதல் 200கோடி சம்பளம் வாங்கும் விஜய் சினிமாவை விட்டு அரசியல் வருவது பலர் எதிரிபார்க்காத ஒன்று தான் ஆனால் சினிமாவை விடாமல் அரசியலில் வெற்றி பெற்ற நடிகர் MGR முதல்வர் ஆனார்.விஜய் நினைத்தால் சினிமாவை விட்டு கொடுக்காமல் அரசியலில் பயணம் செய்தால் அது கமலஹாசன் கதை போல் ஆகிவிடும் என்று எண்ணி இருக்கலாம் MGR அவர்களின் அரசியல் சினிமா உடன் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து பிணைத்து போனது திமுக தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடித்ததற்கு முக்கிய காரணம் MGR என்ற ஒரு முகம் அது கட்சியின் கொடி பாடல் வசனம் என்று திமுகவை மக்களிடம் சேர்த்தது சினிமாத்துறை முக்கிய பங்கு என்று சொல்லலாம்.
தனி கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிப்பது அந்த கால கட்டம் சரியாக இருக்கலாம் ஆனால் இன்றைய காலகட்டத்தில் சாதாரணமான ஒன்று என்று சொல்லி விட முடியாது. பல கட்சிகள் பல கூட்டணிகள் 50 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்ட இரு பெரும் கட்சிகள் இதனை சமாளித்து விஜய் அவர்கள் ஆட்சியை பிடிக்க சினிமாவை விட்டு வெளியே வந்தது சரியாக முடிவு என்று அரசியல் ஆலோசகர் சொல்லுகின்றனர்.திமுக அதிமுக கட்சிகள் அவர்களின் பூத் கமிட்டியை பட்டி தொட்டி என்று கொண்டு போய் சேர்த்து உள்ளனர். புதிய கட்சிகளுக்கு அது ஒரு பெரும் சவாலாக உள்ளது.பண பலம் படை பலம் என அனைத்தும் மீறி
விஜய் அவர்கள் அரியணை பிடிப்பாரா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க முடியும்!
