மாற்றுத்திறன் கொண்ட காதல்

Hey all!♥️ வணக்கம்🙏🏻

 

கேட்டதில் இருந்து மனதில் சலனம், அதனால் தான் இப்பதிவு..

வியான், பவி என இருவர் தொலைதூரத்தில் இருந்து நேரில் காணாமல் ஆறு மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். 

இதில் விதியின் பிடி என்னவென்றால் இருவரும் மாற்றுத்திறன் கொண்டவர்கள்.

"பெற்றத் திறன் வேண்டுமாயின் மாறியிருக்கலாம், இருப்பினும் கொண்ட மனம் என்னவோ ஒன்று தானே"

மாற்றுத்திறன் கொண்டவர்கள் காதலிக்க தகுதி இல்லாதவர்கள் என்ற அழுக்கு இன்னும் இச்சமூகத்தில் இருந்து துடைக்கபடவில்லை என்பதை விட, அவர்களை ஏற்றுக்கொள்ளும் மனபான்மாய் இன்னும் இருபாலருக்கும் வரவில்லை என்பதே உண்மை!!

அது ஒருபக்கம் இருக்க..

ஏனோ, நாம் அறிந்த இவ்வுண்மையை இருவரும் அறியவில்லை, காரணம் என்னவென்றால்  சொல்வதற்கு தைரியம் உடன் வரவில்லை என உணரப்படுகிறது. இதில் சற்று முக்கியமானது என்னவென்றால் பவி கொண்ட மாற்றுத்திரணை விடவும் மிக சிறிய மாற்றம் தான் வியான் கொண்டவை.. அதனால் தான் என்னவோ உண்மை அறிந்த வியான் தான் காதலித்த பவியை காரணம் கூறாது விட்டு சென்றுவிட்டான்.

தான் ஏன் அவளிடம் தன் நிலையை மறைத்தோம்  அப்படி தானே அவளுக்கும் தோன்றி இருக்கும் என்று சிறு நேரம் அவள் நிலையை உணர முயற்ச்சித்திருந்தால், இவ்வாறு பிரிந்து செல்ல மனம் வந்திருக்காதோ என்னவோ.. 

இருவரும் சொல்ல தைரியம் இல்லாது தாமதித்தது தவறா? 

இல்லை..

உண்மை அறிந்து ஏற்க்க மனமில்லாமல் கடந்து சென்ற வியான் மீது தவறா..?

நீங்க என்ன நினைக்கிறீங்க?

உங்களை இது போன்று மாற்றுத்திறன் உள்ளவர் காதலித்தால் ஏற்றுகொல்வீர்களா..?

Love
3
Parrainé
Passer à Pro
Choisissez le bon plan pour vous
Parrainé
En savoir plus