ஈரோடு கிழக்கும் இரட்டை இலையின் இலக்கும்!

ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் திரு. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காலமான நிலையில் தேர்தல் ஆணையம் இடை தேர்தல் அறிவித்தது. இதனை தொடர்ந்து எந்த கட்சி ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட போது என்று எதிர்ப்பார்ப்பு எழுந்தது. மறுபடியும் காங்கிரஸ் போட்டியிட உள்ளதா அல்லது திமுக போட்டியிட உள்ளதா என்று குழப்பம் உண்டான நிலையில் தற்போது திமுக சார்பில் திரு.சந்திரகுமார் போட்டியிட உள்ளார். என்று திமுக தலைமை அறிவித்த நிலையில் அரசியல் களம் சூடுபிடித்தது இதனனை தொடர்ந்து எதிர்கட்சி ஆன அதிமுக களம் காணும் என்று பேசப்பட்ட நிலையில் அதிமுக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை
புறக்கணிப்பதாக அறிவித்தது முன்னதாக நடந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததால் கட்சியின் நலன் கருதி இந்த முடிவை அதிமுக பொதுச்செயலாளர் திரு.எடப்பாடி பழனிச்சாமி எடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் தங்கள் கட்சி போட்டியிடவில்லை என்றாலும் தொண்டர்கள் யாருக்கும் வாக்களிக்க போவது இல்லை என்று ஒரு சுவாரசிய தகவல் கிடைத்து உள்ளது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திருமதி.சீதாலட்சுமி வாக்கு சேகரிக்க காய்கறி வியாபாரி ஒருவரின் கடைக்கு சென்ற போது நாங்கள் யாருக்கும் வாக்கு அளிக்க போவது இல்லை என்று அவர் கூறிய போது நா.த.க வேட்பாளர் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் தான் தெரிய வந்தது அவர் அதிமுக ஆதரவாளர் என்றும் எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு மட்டும் தான் ஓட்டு என்று தெரிவித்தார். இதனால் அதிமுக வாக்கு வங்கி எந்த கட்சிக்கு போகாமல் தக்க வைக்க இது ஒரு யுக்தியாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது .எனவே ஈரோடு கிழக்கில் தேர்தல் நகர்வு எப்படி இருக்கும் என்று பொறுத்து இருந்து தான் பார்க்க முடியும்!