டாக்டர் டி.கே.பிரபு இனி T.V.K-வின் பிரபு! பரபரப்பாகும் அரசியல் களம்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சேர்ந்த பிரபல பல் மருத்துவர் திரு.டி.கே.பிரபு அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் சிவகங்கை கிழக்கு மாவட்டக் கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபகாலமாக மக்கள் பணியில் தீவிரமாக இறங்கிய திரு.பிரபு அவர்கள் காரைக்குடி முழுவதும் மிகவும் பிரபலமாக பேசப்பட்டவர்.இன்ஸ்டாகிராம் முதல் ஃபேஸ்புக் வரை அவர் செய்யும் மக்கள் பணிகள்,உதவிகள் கட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. 2026 ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் எதிர்நோக்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடிப்பதற்கு பல்வேறு களப்பணிகள் செய்து வரும் நிலையில் முதற்கட்டம்  இரண்டாம் கட்டம் என்று அடுத்தடுத்து மாவட்ட செயலாளர் நியமித்து வருகிறது. காரைக்குடி சட்ட மன்ற தொகுதி பாரம்பரியம் காங்கிரஸ் தொகுதியாக இருந்துவரும் நிலையில் தற்போது திரு.டி.கே பிரபு அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் முகமாக பார்க்கப்படுகிறார்.அடுத்த வருடம் சட்ட மன்ற தேர்தல் வெற்றியை பொறுத்துதான் இவரின் அரசியல் நகர்வுகளை நாம் பார்க்க முடியும்.

 

Patrocinado
Actualizar a Pro
Elija el plan adecuado para usted
Patrocinado
Leer más