நேற்று IIM மாணவன்! இன்று அதிமுக மாணவர் அணியின் தவைவன்! யார் இந்த சிங்கை ராமச்சந்திரன்?

கோவை மாவட்டத்தின் சிங்காநல்லூர் தொகுதியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு.சிங்கை கோவிந்த ராசு அவர்களுக்கு மகனாக பிறந்தவர் தான் சிங்கை ராமசந்திரன் தனக்கு 11 வயது இருக்கும் போது தந்தை காலமாக தாயின் அரவணைப்பில் வளர்ந்தார் பின்னர் பள்ளி படிப்பு முடித்து கோவை PSG கல்லூரியில் பொறியியல் படிப்பு முடித்தார் அதன் பின்னர் குடும்பத்தின் சூழல் காரணமாக வேலைக்கு சென்றவர் மனதில் ஒரே எண்ணம் வந்து வந்து போனது அப்பா விட்டு சென்ற மக்கள் பணியை நானும் செய்ய வேண்டும் முன்னாள் முதவல்வர் செல்வி. ஜெயலலிதா அவரை ஒரு முறை பார்த்து கழகத்தின் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது இவரின் எண்ணமாக இருந்தது .அதன் பிறகு இவர் நினைத்தபடி கனவாக இருந்தது நிஜம் ஆனது IIM அகமதாபாத் மேற்படிப்புக்காக M.B.A படிக்கும் போது அடுத்த கட்டமாக இவர் படித்த படிப்புக்கு லட்சம் ,கோடிகளில் சம்பளம் வாங்குவதற்கான வேலைகள் வந்தும் அந்த வாய்பை நிராகரித்து விட்டு நான் மக்கள் பணிகள் செய்ய அண்ணா திமுகவில் இணைய போகிறேன் என்று இவர் சொல்லிய செய்தி பத்திரிக்கையில் வெளியான நிலையில் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நேரடியாக ஜெயலலிதா அவர்கள் அழைத்து இவருக்கு கட்சியின் தகவல் தொழில் நுட்ப செயலாளர் பதவியை வழங்கினார்.தஞ்சை இடை தேர்தலில் முதன் முறையாக இவர் செய்த Robert பிரச்சாரம் நல்ல வரவேற்பை பெற்றது.கோவை மாவட்டத்தில் பொது மக்களுக்கு இலவசம் இ-சேவை மையம் ஒன்றை நடத்தியும் வருகிறார்.இதுவும் நல்ல வரவேற்பை பெற்றது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு திரு.எடப்பாடி பழனிச்சாமி பொதுசெயலாளர் ஆன பிறகு 2024 ஆம் ஆண்டு கோவை தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது பாஜக அண்ணா மலைக்கு எதிராக களம் கண்டார் அந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைய இவரின் அரசியல் பேசுக்கள் மற்றும் கட்சியின் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக இவருக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு அதிமுக மாணவர் அணியின் செயலாளர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு இந்த பதவி கொடுத்துக்கு காரணம் இளைஞர்கள் மத்தியில் கட்சியை பலப்படுத்த வேண்டும் மற்றும் எதிர்கால கட்சியின் நலனை கருத்தில் கொண்டும் இந்த பதவி கொடுக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. அதிமுக மீண்டும் 2026 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருமா இளைஞர்கள் வாக்கை அறுவடை செய்யுமா என்பதை நாம் பொறுத்து இருந்துதான் பார்க்க முடியும்!

Sponset
Oppgrader til Pro
Velg riktig plan for deg
Sponset
More Articles
Vis mer
Oppdag hendelser
Vis mer
Oppdage mennesker
Vis mer
Sponset