தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார், உலகநாயகன் ஆகும் இளம் நடிகர்கள்??

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரகளான ரஜினி,கமல் படங்கள் வெவ்வேறு கதைகளை கொண்டதுஆனால் ரஜினியின் படங்கள் மாஸ் மசாலா கலந்தது,கமலின் படங்கள் முற்றிலும் மாறுபட்ட கதை களங்களை கொண்டது இதனால் ரசிகர்கள் ரசனையும் மக்களின் பார்வையும் வித்தியாசமாக இருக்கிறது. கமலின் படங்கள் மற்றும் அவரின் முயற்சிகள் சினிமாவுக்காக அவர் செய்யும் புதுமையான விஷயங்கள் பார்த்து பல இயக்குநர்கள் சினிமாவை கற்று கொள்கின்றனர். ரஜினியின் படங்கள் மாறுபட்டு குடும்பங்கள் கொண்டாடும் ஹீரோவாக கொண்டாடபடுகிறார்.இவர்களுக்கு பின்னர் வந்த அஜித் விஜய் இருவரும் மாஸ் ஹீரோக்கள் என்ற பாதையில் வலம் வந்ததால் ரஜினி மாதிரி குடும்பங்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் ஹீரோகளாக பார்க்கப்படுகின்றார். தற்போது வரும் இளம் ஹீரோக்கள் இருவர் தான் அடுத்த ரஜினி கமல் என்று பேச தொடங்கி உள்ளனர் அவர்கள் தான் பிரதீப் ரங்கநாதன் மற்றும் மணிகண்டன் இவர்கள் இருவரும் சினிமாவில் உதவி இயக்குனர் மற்றும் இயக்குனராக வெற்றி படங்கள் கொடுத்தும் அதில் ஹீரோவாக நடித்து கலக்கி வருகின்றனர் பிரதீப் ரங்கநாதன் குறும்படங்கள் மூலம் அறிமுகம் ஆகி பின்னர் இயக்குனர் ஆக ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்ற வெற்றி படம் கொடுத்து AGS தயாரிப்பில் Love Today என்று கதையில் Hero-வாக நடித்து டிராகன் வரை ஹிட் கொடுத்து உள்ளார் இவரின் ஸ்டைல் மற்றும் நடைகள் இவர் செய்யும் காமெடிகள் அனைத்தும் ரஜினி போன்றே தனித்துவமாக தெரிவதால் பிற்காலத்தில் ரஜினி போன்று உச்ச நட்சத்திரம் ஆவார் என்றே பேசிப்படுகிறது. அதேமாதிரி நடிகன் மணிகண்டன் எழுத்தாளர் உதவி இயக்குனர் குறும்படம் இயக்குனர் குணச்சித்திர நடிகர் மற்றும் நடிகர் என்று படிப்படியாக வளர்ந்து உள்ளார் ஜெய்பீம் படத்தில் இவரின் கதாபாத்திரம் நடிப்பு மிகபெரிய அளவில் பேசப்பட்டது இவரின் குட் நைட் திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் நாயகன் ஆக பார்க்கப்பட்டது lover படமும் Toxic காதல் கதையை கொண்டதால் இளம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது தற்போது வெளியான குடும்பஸ்தன் படமும் நல்ல வரவேற்பை பெற்று உள்ளதால் கமல் மாதிரி இவரின் திரைபயணமும் வித்தியாச கதை களத்தை நோக்கி நகரும் என்றும் பேசப்படுகிறது. தமிழ் சினிமாவின் அடுத்த உச்ச நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் என்றால் இருவரும் சரியான கதை, நடிப்பு அதிக உழைப்புடன் செயல்பட்டால் நிச்சயமாக அந்த இடத்தை பிடிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது...

Like
Love
2
Sponsored
Upgrade to Pro
Choose the Plan That's Right for You
Sponsored
More Articles
See All
Discover Events
See All
Discover People
See All
Sponsored