விலகும் அண்ணாமலை? ஆட்சி அமைக்கும் இரட்டை இலை? EPS-அமித்ஷா சந்திப்பு!

இன்று 2 நாள் சுற்று பயணமாக சென்னை வந்தடைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கூட்டணி கணக்கை பற்றி முடிவு செய்ய சென்னை வந்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் விடுதியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமித்ஷா அவர்கள் 2026-ல் NDA ஆட்சி அமையும் என்றும் அதுவும் தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஆட்சி அமையும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் திரு.எடப்பாடி பழனிச்சாமி, தற்போதைய பாஜக மாநில தலைவர் திரு.அண்ணாமலை மற்றும் புதிதாக பாஜக மாநில தலைவர் ஆக பொறுப்பேற்க உள்ள திரு. நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டனர்.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் 2019 இல் இருந்து 2021 வரை மாறமல் பயணிப்பதை தொடர்ந்து தற்போது பாஜக அதிமுக கூட்டணி முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. வருகிற சட்ட மன்ற தேர்தலில் இருமுனை போட்டி தான் என்று இரு கட்சியும் உணர்த்தி உள்ளதா? அல்லது நாம் தமிழர் , தமிழக வெற்றிக் கழகம் என்று மூன்று முனை போட்டியாக மாற உள்ளதா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்!

Like
1
Sponset
Oppgrader til Pro
Velg riktig plan for deg
Sponset
More Articles
Vis mer
Oppdag hendelser
Vis mer
Oppdage mennesker
Vis mer
Sponset