Ran(t)dumps of Surya!

Hey all!♥️ வணக்கம்🙏🏻

நீங்கள் ஒரு விஷயம் செய்ய வேண்டும் என்று நினைக்கையில் ஏதேனும் ஒரு கட்டாயத்தால் அச்செயலை செய்யாதிருப்பது தான் சரி என்று எண்ணி அதை "செய்ய மறுத்து வாழ்வது தான் ஒரு நல்ல வாழ்வியல் முறை" என்று நினைத்தால் அதுவே, ஆக சிறந்த முட்டால் தனம்! ஆகும்.

பின்ன என்ன?

 ஆசையாக நினைத்த ஒரு செயலை செய்யாமல் வாழ்நாள் முழுதும் அடக்கி வாழ்வதற்கு பதிலாக செய்தால் என்னதான் ஆகும் என்று ஒரு கை பார்ப்பதால் என்னாகிவிட போகுது? வேண்டுமானால் நூறு பிரச்சனைகளில் இன்னும் ஒன்று சேரும் அவ்வளவுதானே! செய்யாமல் வாடும் மனதிற்கு பதில் செய்து பார்த்து வரும் சர்ச்சைக்கு வழு சற்று குறைவு தான். 

இருப்பது என்னவோ ஒரு வாழ்வு தான், அதையும் முழுதாக வாழ்ந்து விடுதல் வேண்டும். இல்லையெனில் இறுதி நாட்களில் உங்கள் வாழ்க்கை புத்தகத்தை புரட்டிப் பார்க்கக் கூட மனம் வராது.

நம் வாழ்வில் நகரும் ஒரு ஒரு நொடியும் நமக்கென்று இருக்கையில் பிறர் நிழல் எதற்கு??

சிந்தித்து செயல் படுங்கள், பிறர் நோகாது வாழ்ந்திருங்கள்!!!.

 

வாசித்தமைக்கு நன்றி💐

 

Love
2
Sponset
Oppgrader til Pro
Velg riktig plan for deg
Sponset
More Articles
Vis mer
Oppdag hendelser
Vis mer
Sponset