அன்று வீட்டின் செல்லப்பிள்ளை இன்று காரைக்குடி மக்களின் நம்ம வீட்டு பிள்ளை! யார் இந்த Voice Of namma ooru Bhuvi!!

காரைக்குடிக்கு அருகில் உள்ள புதுவயல் ஊரைச் சேர்ந்த புவனேஷ்வரன் பள்ளி படிப்பின் கால கட்டத்தில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மீது கொண்ட ஆர்வத்தால் பல குரலில் பேச தொடங்கியுள்ளார் 2017 ஆம் ஆண்டு தனியாக மொபைல் போன் ஒன்றை வாங்கி அதில் பிரபல நடிகர்கள் போன்று பேசி 2 நிமிடத்தில் 40 Voice பேசி Youtube-ல் அசத்தி உள்ளர் அதுமட்டுமில்லாமல் குறும்படம் இயக்கி உள்ளார். அன்று பல குரலில் பேச தொடங்கிய புவனேஷ்வரன் குரல் சரியாக 2023 ஆம் ஆண்டு காரைக்குடி நகர் முழுவதும் கேட்க தொடங்கி உள்ளது.

"Happy Street என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்று மிமிக்கிரி செய்ய வாய்ப்பு கேட்டு உள்ளார் புவனேஷ்வரன் அந்த நிகழ்ச்சிக்கு பிரபல நடிகர் விஜய் சேதுபதி குரலில் பேசி இவருடைய நண்பன் Insta Page-ல் Upload செய்து உள்ளார் Views,Likes வரவேற்பு வருவதை பார்த்த புவனேஷ் தனியாக தன்னுடைய Insta Page-ல் முதல் வீடியோவாக சிவபெருமானின் கோடிலிங்கம் பற்றி தகவலை சேகரித்து instagram-இல் பதிவு செய்துள்ளார். கோவில் பற்றிய தகவல் ஆய்வு செய்து தொடர்ச்சியாக Reels-ல் வெளியிட்ட புவனேஷ்வரன் Video அனைத்தும் 100K மேல் Hit அடிக்க ஆரம்பித்து உள்ளது. 

"Voice Of namma ooru" என்ற புதிய instagram Page-ல் தன்னுடைய Trade mark ஆன வணக்கம் காரைக்குடி மக்களே என்ற தமிழ் சொல்லில் ஊரின் பெருமை வாய்ந்த‌ கோவில் மற்றும் ஊரின் பெருமைகள் பற்றி 1 நிமிடத்தில் அனைவருக்கும் புரியும் வகையில் எளிதாக Reels video செய்துள்ளார் *காரைக்குடி சீரிஸ்* என்று சீரிஸ் ஒன்றை உருவாக்கி அதில் அரண்மனை வீடுகள் பாரம்பரிய வீடுகள் உணவுகள் பற்றி அறிய தகவல்களை video-வாக தயாரித்து உள்ளார் மற்றும் *செட்டிநாடும் 76 ஊரும்*  என்றும் இதில் முக்கியமாக இவர் கொடுக்கும் Content-க்கு பின்னர் தன் அக்கா அழகு அல்லி ராணி இருப்பதாகவும் அவரின் பங்களிப்பு அதிகம் என்றும் அவரால் மட்டும் என்னுடைய insta page முதல் 10k followers வந்தனர் என்றும் மகிழ்ச்சி உடன் தெரிவித்தார். மதுரையில் வேலை செய்து விடுமுறை நாட்களில் காரைக்குடிக்கு வந்து மக்களுக்கு தெரியாத பல தகவல்களை சேகரித்து அடுத்தலைமுறைக்கு சென்றடைய நான் தொடர்ந்து செயல்படுவேன் என்று சொல்லுகிறார் புவனேஷ்வரன் விரைவில் இவருடைய Voice Of namma ooru insta Page 50k followers அடைய உள்ளது. பொழுதுபோக்கு என்ற ஒன்றை மையமாக வைத்து பணம் சம்பாதிக்கும் எண்ணம் இல்லாமல் இளைஞர்களுக்கு அறிவை வளர்த்து கொண்டு நல் வழியை பின்பற்றி செல்ல புவனேஷ்வரன் ஒரு கருவியாக இருப்பதை பற்றி பெருமை கொள்கிறோம் என்றும் அவரின் நண்பர்கள் கூறுகின்றனர். இவரின் நம்ம ஊரு பயணம் விரைவில் உலகின் உள்ள ஊரின் பெருமைகள் அனைத்தும் சொல்லும் வெற்றி பயணம் ஆக வாழ்த்துக்கள்

Like
1
Gesponsord
Upgrade naar pro
Kies het juiste plan voor u
Gesponsord
Lees meer